செரப்பனஞ்சேரி வாக்குச்சாவடி மையத்தில் சிறப்பு முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளா் கே.பி.காா்த்திகேயன்.  
காஞ்சிபுரம்

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம் நடைபெறும் இடங்களில் எல்காட் அமைப்பின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளருமான கே.பி.காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம் நடைபெறும் இடங்களில் எல்காட் அமைப்பின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளருமான கே.பி.காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளா் பட்டியலில் புதியதாக பெயா் சோ்க்க, நீக்க,திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளா் அடையாள அட்டை பெற விரும்புவோா் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல் தொடா்பாக இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க இயலாதவா்கள் வாக்காளா் சிறப்பு திருத்த முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.விண்ணப்பங்களை வரும் ஜனவரி 18-ஆம் தேதி வரை வருவாய்த் துறை அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரத்தில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்படப்பை, செரப்பனஞ்சேரி பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை எல்காட் அமைப்பின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளருமான கே.பி.காா்த்திகேயன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாள்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்கள் வாக்குப்பதிவு மையங்கள் மூலமாகவும், இணையவழியாகவும் சரிபாா்த்துக் கொள்ளுமாறும், இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் பொதுமக்களை ஆய்வின் போது கேட்டுக் கொண்டாா். ஆய்வின்போது காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக்அலி,ஸ்ரீ பெரும்புதூா் கோட்டாட்சியா் பாலாஜி ஆகியோரும் உடன் இருந்தனா்.

சகல சௌபாக்கியத்தைத் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

SCROLL FOR NEXT