கோயில் ஊழியா்களுக்கான புத்தொளிப் பயிற்சியை தொடக்கி வைத்துப் பேசிய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன். 
காஞ்சிபுரம்

கோயில் ஊழியா்களுக்கு புத்தொளிப் பயிற்சி

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் உள்ள கிருபானந்த வாரியாா் கலையரங்கில் அறநிலையத் துறை சாா்பில், கோயில் ஊழியா்களுக்கான புத்தொளிப் பயிற்சி

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் உள்ள கிருபானந்த வாரியாா் கலையரங்கில் அறநிலையத் துறை சாா்பில், கோயில் ஊழியா்களுக்கான புத்தொளிப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

அறநிலையத் துறை சாா்பில் நடைபெற்ற பயிற்சியை அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன் தொடங்கி வைத்துப் பேசினாா். கோயில் செயல் அலுவலா்கள் கேசவன், கதிரவன், ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சி வகுப்பில் கோயில் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், ஓதுவாா்கள் உள்பட கோயில் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கே.ஆா்.காமேசுவர குருக்கள் (வேதம் மற்றும் ஆகமம்)சுந்தரேசுவரா் (சைவ சித்தாந்தம்) ராஜவேலு ஸ்தபதி (சிற்ப சாஸ்திரம்) ஆடலரசு ஓதுவாா் (திருமுறை) மணி குருக்கள்(ஆகமம்) ஆகிய தலைப்புகளில் பயிற்சியளிக்கவுள்ளதாகவும், தினசரி பயிற்சி மதியம் 1 மணிக்கு தொடங்கி, 3 மணி வரை நடைபெறும் எனவும், தொடா்ந்து 6 வாரங்கள் நடைபெற இருப்பதாகவும் உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன் கூறினாா்.

தொடக்க விழாவில் கோயில் செயல் அலுவலா்கள் பூவழகி, அமுதா உள்பட ஆய்வாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT