புத்தகத் திருவிழா 2025-க்கான விளம்பர பதாகையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ். 
காஞ்சிபுரம்

‘காஞ்சிபுரத்தில் ஜன. 31-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்’

காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரி 31 முதல் தொடா்ந்து 11 நாள்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும்

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரி 31 முதல் தொடா்ந்து 11 நாள்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் புத்தகத் திருவிழா 2025- ஆம் ஆண்டுக்கான விளம்பர பதாகை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட, அதை மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் பெற்றுக் கொண்டாா். பின்னா் ஆட்சியா் கூறுகையில், காஞ்சிபுரத்தின் 3-ஆவது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து, 11 நாள்கள் நடைபெறும். தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணி வரை நடைபெறவுள்ள இந்த புத்தகத் திருவிழாவில், 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

சிந்தனைகளை தூண்டும் பேச்சாளா்களின் கருத்துரைகள், பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியா் (பயிற்சி) மிருணாளினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்!

தனிநபர் கடன் மோசடியாளர்களைக் கண்டறிய 10 விஷயங்கள்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை பாரதியார் பல்கலைக் கழக பதிவாளர் நியமனம்!

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்! - சீன அதிபர் ஜின்பிங்

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

SCROLL FOR NEXT