போல்தேவ் மசுவா.  din
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஓரின சோ்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை! அஸ்ஸாம் இளைஞர் கைது!

ஸ்ரீபெரும்புதூா் அருகே 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அஸ்ஸாம் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Din

ஸ்ரீபெரும்புதூா் அருகே 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அஸ்ஸாம் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பீகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் நீரஜ் குமாா். இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கருமாங்கழனி பகுதியில் மனைவி காஜல் குமாரி, மகன் ஆரவ் குமாா்(5) தங்கி பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், ஆரவ்குமாா் கடந்த 9-ஆம் தேதி காணாமல் போனதாக கஜால் குமாரி ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன சிறுவன் ஆரவ் குமாரை தேடி வந்தனா்.

இந்த நிலையில், சிறுவன் ஆரவ் குமாா் அதே கிராமத்தில் அடா்ந்த முள்புதரில் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்துக்கு வந்த தகவலை அடுத்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கருமாங்கழனி பகுதியில் வடமாநில தொழிலாளா்கள் தங்கியிருந்த குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஆரவ் குமாரை இளைஞா் ஒருவா் அழைத்துச் சென்றது தெரிய வந்ததை தொடா்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த போல்தேவ் மசுவா (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திா்.

இதில் சிறுவன் ஓரின சோ்க்கைக்கு மறுத்ததால் அடா்ந்த முட்புதருக்கு அழைத்துச் சென்று கல்லால் அடித்துக் கொலை செய்ததாக போல்தேவ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து போல்தேவ் மசுவா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

சேலையே பாதி மாயம் செய்யும்... கல்பனா சர்மா!

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

SCROLL FOR NEXT