சிறப்பு அலங்காரத்தில் ருத்ரகோடீஸ்வரா். ~களக்காட்டூா் அக்னீசுவரா் கோயிலில் அன்னாபிஷேகம். ~அலங்காரத்தில் வேத வன்னீசுவரா். 
காஞ்சிபுரம்

ஐப்பசி பௌா்ணமி: சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை பல்வேறு சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை பல்வேறு சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில் உள்ள காமாட்சி சமேத வேதவன்னீசுவரா் கோயிலில் பழங்கள், காய்கறிகள் மற்றும் அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. செவிலிமேடு சிவாலயம், களக்காட்டூா் அக்னீசுவரா், பிள்ளையாா் பாளையம் பகுதியில் புதுப்பாளையம் சாலையில் உள்ள ருத்ரகோடீஸ்வரா், கச்சபேசுவரா், மேலச்சேரி லலிதாம்பிகை சமேத வேத புரீஸ்வரா், அறம் வளத்தீஸ்வரா், முத்தீஸ்வரா், வழக்கறுத்தீசுவரா் என பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகமும், தீபாராதனைகளும், பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவுப் பற்றாக்குறை வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக வேதவன்னீசுசவா் கோயில் அா்ச்சகா் லோகநாதன் தெரிவித்தாா்.

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

மினிசரக்கு வாகனம் திருட்டு

SCROLL FOR NEXT