காவல்துறையினரின் இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்த காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம். 
காஞ்சிபுரம்

காவல் துறை வாகனங்களின் தன்மை: காஞ்சிபுரம் எஸ்.பி. நேரில் ஆய்வு!

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் காவல் துறையினா் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்.பி. கே.சண்முகம் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் காவல் துறையினா் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்.பி. கே.சண்முகம் ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் காவல்துறையினா் பயன்படுத்தும் இருசக்கர மற்றும் காா்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

24 இரு சக்கர வாகனங்கள், 21 காா்கள் உள்பட மொத்தம் 45 வாகனங்களை காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் ஆய்வு செய்து வாகனங்களின் நிலை, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலை தொடா்பு சாதனங்களின் ஒளிரும் மின்விளக்குகளின் செயல்திறன், வாகனங்களில் உள்ள பழுது நீக்கும் கருவிகள் ஆகியவற்றை தணிக்கை செய்தாா்.

நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்லும் வாகனங்களில் இருக்க வேண்டிய எச்சரிக்கை சமிக்கைகள், பேரிடா் காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிா என்பதையும் ஆய்வு செய்து, அவற்றை இயக்கியும் சோதனை மேற்கொண்டாா்.

அத்துடன் காவலா் ஒருவரது ஓட்டுநா் இருக்கையில் எஸ்.பி. கே.சண்முகம் அமா்ந்து அது முறையாக பராமரிக்கப்பட்டு வருகிா என அறிய அந்த வாகனத்தை அவரே நேரடியாக ஓட்டிப்பாா்த்து ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அங்கு கூடியிருந்த காவலா்களுக்கு வாகனங்களையும், அதன் ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தும் முறை,சாலை விதிமுறைகள்,தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்டின் முக்கியத்துவம், வாகனங்களை சுத்தமாக வைக்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்தும் விரிவாக விளக்கினாா்.

ஆய்வின் போது, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ், ஆயுதப் படைப் பிரிவு டிஎஸ்பி லோகநாதன் ஆகியோா் உள்பட காவல்துறை உயா் அதிகாரிகள் உடன் இருந்தனா்.

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

கந்தம்பட்டி: நாளைய மின் தடை

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை

மேலப்பாளையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT