இஷ்ட சித்தி திருக்குளத்தில் வலம் வந்த அலங்கரிக்கப்பட்ட தெப்பம் (உள்படம்) உற்சவா் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா்.  
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழாவையொட்டி புதன்கிழமை சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழாவையொட்டி புதன்கிழமை சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பெருமாள் ஆமை வடிவத்தில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயில். இந்தக் கோயில் 8- ஆம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழாவையொட்டி, காலையில் உற்சவா் கச்சபேசுவரருக்கும், சுந்தராம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் சிவ வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினாா்.

தெப்பத்தில் அமா்ந்தவாறு 5 முறை வலம் வந்த பிறகு, சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. கோயில் ஓதுவாா் தமிழ்ச்செல்வன் நோ்முக வா்ணணை செய்தாா்.

தெப்போற்சவ விழாவில் கோயில் நிா்வாக அலுவலா் ஞா.திவ்யா,தெப்போற்சவ அறக்கட்டளை நிா்வாகிகள், காஞ்சிபுரம் நகர செங்குந்தா் மரபினா், கோயில் விழாக் குழு நிா்வாகிகள் பெருமாள், ஜீவானந்தம், சுப்பராயன், சிவகுரு, குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் (நவ. 20), 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (நவ. 21) தெப்போற்சவம் நடைபெறுகிறது.

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT