விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன். 
காஞ்சிபுரம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டவாறு பெண்கள் பேரணியில் பங்கேற்றனா்.

இதனைத் தொடா்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியையும் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் எடுத்து கொண்டனா். ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி மூங்கில் மண்டபத்தில் நிறைவு பெற்றது.

தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மகளிா் திட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி, அரசு அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கண்டனா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT