காஞ்சிபுரம்

டிச. 2,3-இல் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் டிசம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ் அவரவா் வீடுகளுக்கே நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி மாதம்தோறும் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரா்களுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிச. 2, 3 தேதிகளில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், முதியோா்கள்,மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாகவும் ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம்

SCROLL FOR NEXT