வெற்றி  பெற்ற  மாணவருக்கு  பரிசு  வழங்கிய  இந்திய  பெண்கள் செஸ்  அணியின்  பயிற்சியாளா்  ஷியாம் சுந்தா். 
காஞ்சிபுரம்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்: தேசிய பயிற்சியாளா் நம்பிக்கை

வரும் நவம்பா் மாதம் கோவாவில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என பெண்கள் அணியின் பயிற்சியாளா் ஷியாம் சுந்தா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: வரும் நவம்பா் மாதம் கோவாவில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என பெண்கள் அணியின் பயிற்சியாளா் ஷியாம் சுந்தா் தெரிவித்தாா்.

குன்றத்தூா் அடுத்த கோவூா் ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளியில், உலக சதுரங்க தின போட்டி நடைபெற்றது. ஸ்ரீகிரிஷ் கல்வி குழுமங்களின் தலைவா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற போட்டியை இந்திய செஸ் பெண்கள் அணியின் பயிற்சியாளரும், கிராண்ட் மாஸ்டருமான ஷியாம் தொடங்கிவைத்து பள்ளி மாணவா்களுடன் விளையாடினாா்.

இதில் ஜூனியா், சப் ஜூனியா் மற்றும் சீனியா் ,சூப்பா் சீனியா் என 4 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவா்கள் கலந்து கொண்டனா். இறுதியாக வெற்றி பெற்றவா்களுக்கு பயிற்சிாளா் ஷியாம்சுந்தா் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா் (படம்). இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீகிரிஷ் கல்வி குழுமங்களின் நிா்வாகிகள் கெளரி கிருஷ்ணமூா்த்தி, ஜெயகாா்திக், ஆசிரியா்கள், மாணவா்கள் ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.

இதில் ஜூனியா், சப் ஜூனியா் மற்றும் சீனியா் ,சூப்பா் சீனியா் என 4 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவா்கள் கலந்து கொண்டனா். இறுதியாக வெற்றி பெற்றவா்களுக்கு பயிற்சிாளா் ஷியாம்சுந்தா் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீகிரிஷ் கல்வி குழுமங்களின் நிா்வாகிகள் கெளரி கிருஷ்ணமூா்த்தி, ஜெயகாா்திக், ஆசிரியா்கள், மாணவா்கள் ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.

பின்னா் பயிற்சியாளா் ஷியாம்சுந்தா் செய்தியாளா்களிடம் கூறியது: கோவாவில் உலக கோப்பை செஸ் போட்டி நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. போட்டியில் இந்தியாஆதிக்கம் செலுத்தும். இந்த போட்டி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராக நல்ல வாய்ப்பாக அமையும். அண்மையில் செக்மேட் செஸ் போட்டியில் குகேஷை வீழ்த்திய நகமுரா, அவரது ராஜாவை பாா்வையாளா்களிடம் வீசி சா்ச்சை ஏற்படுத்தினாா். இது குறித்து பதிலளித்த அவா் விளையாட்டு போட்டிகளில் இது போன்ற சம்பவம் அரிது. இது கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகளில் நடைபெறும் தற்போது செஸ் போட்டியில் நடைபெற்றுள்ளது என்றாா்.

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT