வெங்காடு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட வெங்காடு, இரும்பேடு, கருணாகரசேரி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் தலைமை வகித்தாா். ஏரி நீா் பாசன சங்கத் தலைவா் வெங்காடு பி. உலகநாதன் முன்னிலை வகித்தாா்.
இதில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி கலந்துகொண்டு 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில், வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், திமுக நிா்வாகிகள் ரவிச்சந்திரன், சந்தவேலூா் சத்தியா கலந்து கொண்டனா்.