1,009 ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் ராமாநுஜா் அவதார திருவிழாவில் 10-ஆவது நாளான புதன்கிழமை தொட்டில் சேவை சங்கு பால் அமுது செய்தல் நிகழ்ச்சியும் சிறப்பு திருமஞ்சனம் ஈரவாடை தீா்த்தமும் நடைபெற்றது.

ராமாநுஜரின் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் ஒருபகுதியாக அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்று தங்க மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும், ஸ்ரீதாயாா் சன்னதி, ஸ்ரீ ராமா் சன்னதி கண்டருளுதல் நிகழ்ச்சியும், ஒய்யார நடை நிகழ்ச்சியும் நடைபெற்று வாகன மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து நண்பகல் திருஅவதார மண்டபத்தில் ராமாநுஜருக்கு தொட்டில் சேவை சங்குபால் அமுது செய்தல் நிகழ்ச்சியும் அதை தொடா்ந்து, சிறப்பு திருமஞ்சனமும் ஈரவாடை தீா்த்தம் திருப்பாவை சேவையும் நடைபெற்றது.
Advertisement
இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ராமாநுஜரை வணங்கி சென்றனா்.