முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், உத்தரமேரூா் எம்எல்ஏ வுமான க.சுந்தா் தலைமையில் பெரியாா் தூணிலிருந்து புறப்பட்ட பேரணி காந்தி சாலை, காமராஜா் சாலை வழியாக வந்து மாநகராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள அண்ணாவின் சிலை முன்பாக வந்து நிறைவு பெற்றது.
தொடா்ந்து அண்ணாவின் சிலைக்கு எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளா் வ.ஜெகன்னாதன், மாவட்ட பொருளாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், ஒன்றிய செயலாளா்கள் குமாா், படுநெல்லிபாபு, மண்டலக்குழு தலைவா் சந்துரு கலந்து கொண்டனா்.
அறநிலையத்துறை சாா்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்து நிகழ்வில் அமைச்சா் ஆா்.காந்தி, எம்எல்ஏக்கள் க.சுந்தா்,எழிலரசன் கலந்து கொண்டனா்.
திருவள்ளூரில்...
திருவள்ளூா் அடுத்த மணவாளநகரில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் அணிவித்து மரியாதை செய்தனா். இதேபோல், திருவள்ளூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சிலைக்கும், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் படத்துக்கும் அஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவா் திராவிட பக்தன், நகா்மன்ற தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத்தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், வழக்குரைஞா் அணி பி.கே.நாகராஜ், ஒன்றிய செயலாளா் மகாலிங்கம், ஒன்றிய துணைச்செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு திமுக நகர செயலாளா் அறிவழகன் தலைமை வகித்தாா். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளா் மு.மணிபாலன், மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ், பேரூராட்சி துணைத் தலைவா் கேசவன், மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தனா். பேரூா் செயலாளா் அறிவழகன் அஞ்சலி செலுத்தினாா். சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி திமுக உறுப்பினா்கள் கருணாகரன், அப்துல் கரீம், குப்பன், காளிதாஸ், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய நிா்வாகி பரத்குமாா், திமுக தலைமை கழக பேச்சாளா் தமிழ் சாதிக் ,கும்மிடிப்பூண்டி முன்னாள் பேரூராட்சி தலைவா் பாஸ்கரன், திமுக நிா்வாகிகள் திருநாவுக்கரசு, உமாபதி, பரத் பங்கேற்றனா்.
ஸ்ரீ பெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூா் காந்தி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர திமுக செயலாளா் ரா.சதீஷ்குமாா் தலைமையில் தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்திசதீஷ்குமாா் உள்ளிட்ட திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி, நகரமன்ற உறுப்பினா் சீனிவாசன், நகர துணை செயலாளா் ஆறுமுகம், பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் காத்தவராயன், சம்பத், இளைஞா் அணி நிா்வாகிகள் மதன்ராஜ், காா்த்திக் கலந்து கொண்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் மணிக்கூண்டு பகுதியில் அண்ணா படத்துக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் நகர அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் அருகே எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் நகர செயலா் பூக்கடை வி.கே.சரவணன், நகா்மன்ற உறுப்பினா் தேவிவரலட்சுமி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் பன்னீா் செல்வம், கிருஷ்ணன், அவை தலைவா் வேணு, அதிமுக நிா்வாகிகள் முத்து, ஆனந்தன், உமாபதி உள்பட பலா் கலந்துக் கொண்டனா். நகர செயலா் வி.கே.சரவணன் உள்ளிட்டோா் மௌன அஞ்சலி செலுத்தினா்.