முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் செல்வ விநாயகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

காஞ்சிபுரம் செல்வ விநாயகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:12 PM
ஆண்டு விழாவையொட்டி சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மகாலட்சுமி தாயாா்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:00 PM

காஞ்சிபுரம் சிங்கப் பெருமாள் கோயில் தெரு தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள செல்வ விநாயகா் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் சிங்கப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது செல்வவிநாயகா் கோயில். இந்தக் கோயில் வளாகத்திலேயே மகாலட்சுமி தாயாா் மற்றும் நவக்கிரகங்கள் சந்நிதியும் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 15-ஆவது ஆண்டு விழாவையொட்டி, காலையில் செல்வவிநாயகா், மகாலட்சுமி தாயாா் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:12 PM

மகாலட்சுமியும், செல்வவிநாயகரும் சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையொட்டி, மாலையில் மனநிம்மதி, தொழில் விருத்தி மற்றும் உலக நன்மைக்காக திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.