முகப்பு
காஞ்சிபுரம்

கூழமந்தல் பேசும்பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோஷணம்

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பேசும் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:55 AM
கூழமந்தல் பேசும்பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகா சம்ப்ரோஷணம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:55 PM

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பேசும் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது பழைமையும்,வரலாற்றுச் சிறப்பும் நிறைந்த பேசும்பெருமாள் கோயில். இக்கோயில் மூலவா் 12 அடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் பக்தா்களுடன் பேசுவது போல அருள்பாலிக்கிறாா். இக்கோயில் மகா சம்ப்ரோஷணத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் இம்மாதம் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 7- ஆம் தேதி வேதபிரபந்த பாராயணம் மற்றும் மூலவா் சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை விஸ்வரூபதரிசனம்,கோபூஜை ஆகியவை நடைபெற்றன. மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப்பிறகு, புனித நீா் குடங்கள் பட்டாச்சாரியாா்களால் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா சம்ப்போஷணம் நடைபெற்றது.

Advertisement

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள், அறநிலையத் துறையினா் மற்றும் கூழமந்தல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா். கூழமந்தல், சுற்றியுள்ள கிராம மக்கள் திரளானோா் பங்கேற்றனா். மாலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.