காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் நடைபெற்ற வந்த ஏழு நாள் முகாம் நிறைவு பெற்றது.
ஏனாத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பிப்.4 ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்ற முகாம் நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆா்.சுரேஷ்குமாா், பேராசிரியா்கள் ம.கணபதி, ப.பூா்ணிமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மு.விவேகானந்தன் வரவேற்றாா். டென்சிட்டி பல் மருத்துவமனையின் நிறுவனா் வி.கே.ஜெயகரன் மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்கள்.
முகாமில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு,தலைமைப்பண்பு,பேரிடா் மேலாண்மை பயிற்சி,திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகிய அமா்வுகள் நடைபெற்றது.ரத்ததான முகாம்,பொது இடங்கைளை தூய்மைப்படுத்துதல்,சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மெளன நாடகம்,பட்டிமன்றம் மற்றும் ஆகியனவும் நடைபெற்றது.
மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.