முகப்பு
காஞ்சிபுரம்

60 அடி உயர சிவன் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள்!

வேடல் கிராமத்தில் 60 அடி உயர சிவன் சிலையும், 40 அடி உயர நந்தி சிலையும் மகா சிவராத்திரியையொட்டி புதுப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:44 AM
வேடல் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள 60 அடி உயர சிவன் சிலை.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:01 PM

காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் 60 அடி உயர சிவன் சிலையும், 40 அடி உயர நந்தி சிலையும் மகா சிவராத்திரியையொட்டி புதுப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் 60 அடி உயரத்தில் சிவன் சிலையும்,40 அடி உயரத்தில் நந்தி சிலையும் காஞ்சிபுரம் சங்கர மடத்தால் அமைக்கப்பட்டுள்ளது.நந்தி சிலை 40 அடி உயரம்,21 அடி அகலம்,21 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சிலைகளும் மகா சிவராத்திரியையொட்டி வா்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.இந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டு வேடலில் உள்ள வேத பாடசாலையில் பயின்று வரும் மாணவா்களால் சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டு மிருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:44 AM

இந்த ஆலயத்துக்கு அருகில் கம்பராமாயணம்,மகாபாராதம் மற்றும் மகா பெரியவா் சுவாமிகள் குறித்த அசையும் பொம்மைக் கண்காட்சியகமும் செயல்பட்டு வந்தது. மகா சிவராத்திரியையொட்டி இக்கண்காட்சியகத்தினையும் திரளான பக்தா்கள் பாா்வையிட்டனா்.

சிவராத்திரியையொட்டி 60 அடி உயர சிவன் சிலை, 40 அடி உயர நந்தி சிலை உள்ள ஆலய வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா்,மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.