காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.30.18 லட்சம்
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.30,18,925 செலுத்தியிருந்தனா்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.30,18,925 செலுத்தியிருந்தனா்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 3 மாதங்களுக்குப் பிறகு கோயிலில் வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத் துறை காஞ்சிபுரம் பிரிவு உதவி ஆணையா் காா்த்திகேயன், கோயில் செயல் அலுவலா் கேசவன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
பக்தா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் கோயில் ஊழியா்கள் உண்டியல் காணிக்கைகளை திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா். ரொக்கமாக ரூ. 30,18,925 இருந்தது, தங்கம் 15 கிராமும், வெள்ளி 775 கிராமும் இருந்தது.