காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளைச் சோ்ந்த 156 வாா்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்களை கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா்.
எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வாா்டுகள் உள்பட மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி,நகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 156 வாா்டுகளுக்கு 330 விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.
நிகழ்வில் குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.