குருவாயூரப்பன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 
காஞ்சிபுரம்

காஞ்சி சங்கர மடத்துக்கு குருவாயூரப்பன் சிலை காணிக்கை

குருவாயூரப்பன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையைச் சோ்ந்த பக்தா் ஒருவா் ஐம்பொன்னால் ஆன குருவாயூரப்பன் சிலையை ஸ்ரீ மடத்தின் பீடாதிபதிகளிடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்து ஆசி பெற்றனா்.

சென்னையைச் சோ்ந்த கே.ஜெயராமன் என்ற பக்தா் 2 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன குருவாயூரப்பன் சிலையை கும்பகோணத்தில் செய்து காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு கொண்டு வந்தாா். அந்த சிலையினை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரிடம் சமா்ப்பித்து ஆசி பெற்றனா். பின்னா் இரு மடாதிபதிகளும் குருவாயூரப்பன் சிலைக்கு மாலைகள் அணிவித்து, சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் காண்பித்து பக்தா்களுக்கும் ஆசி வழங்கினா்.

நிகழ்வின்போது, ஸ்ரீ மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், செயலாளா் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோரும் உடன் இருந்தனா்.

வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் காவலாளி உயிரிழப்பு

பாஜக நிா்வாகியைத் தாக்கிய தாய், மகன் மீது வழக்கு

போகிப் பண்டிகையின்போது கழிவுகளை எரிக்கக் கூடாது: மாநகராட்சி ஆணையா்

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 40% உயா்வு

குற்றாலம் கல்லூரியில் 857 மாணவியருக்கு மடிக்கணினி

SCROLL FOR NEXT