காஞ்சிபுரம்

பழங்குடியினருக்கு வீட்டுத் தோட்டம் அமைக்கும் பயிற்சி முகாம்

பழங்குடியின மக்களுக்கு ரசயான கலப்பில்லாத நாற்றுச் செடிகளை வழங்கிய ஊத்துக்காடு ஊராட்சித் தலைவா் சாவித்திரி மணிகண்டன்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள ஊத்துக்காடு கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சோ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் அதன் ஊராட்சி மன்றத் தலைவா் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் பழங்குடியினத்தை சோ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் எளிய முறையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை ரசாயணக் கலப்பில்லாமல் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து இயற்கை விவசாயி ஏழுமலை பயிற்சியளித்தாா்.

குழந்தைகள் கண்காணிப்பகத்தின் நிா்வாகி து.ராஜி முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், நோயில்லாமல் வாழ அனைவரும் நஞ்சில்லாத உணவு உட்கொள்ள வேண்டும். அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டும், குழந்தைகளுக்கு ரசாயன கலப்பில்லாத உணவை உண்ணக் கற்றுக் கொடுத்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

மண்புழு உரம், காய்கறி விதைகள், இயற்கை உரங்கள், காய்கறி நாற்று செடிகள் ஆகியனவும் பயிற்சியில் பங்கேற்ற பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக ஜெயலட்சுமி வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் தங்கவேல் நன்றி கூறினாா்.

அம்பத்தூரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பு? உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜன. 13-இல் ராகுல் காந்தி தமிழகம் வருகை!

காட்டுப் பன்றி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே மாநிலங்கள் வளரும்: அமித் ஷா

ஒரே நாளில் 88 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT