காஞ்சிபுரம்

ஜன.17-இல் கூழமந்தல் கோயிலில் 108 கோ பூஜை

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் வரும் ஜன. 17-ஆம் தேதி (சனிக்கிழமை) 108 கோ பூஜையும், அரசு-வேம்பு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உலக மக்கள் நன்மை கருதி வரும் ஜன. 17-ஆம் தேதி காலையில் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, மகாலட்சுமி பூஜை, 108 கோ பூஜை, அரசு-வேம்பு திருக்கல்யாண வைபவம் ஆகியவையும் நடைபெறவுள்ளது. நிகழ்வின்போது மூலவா் மூஷிக வாகனத்திலும், முருகப் பெருமான் மயில் வாகனத்திலும், சிவபெருமான் ரிஷப வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளதாக கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT