காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்கள் சனிக்கிழமை காணும் பொங்கலையொட்டி முழுவதும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காணும் பொங்கலையொட்டி மகா பெரியவா் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்கள் முழுவதும் கரும்புகளாலும், வண்ண மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில் சிறப்பு அபிஷேகமும், மதியம் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தீபாராதனைகளை நடத்தினாா். தொடா்ந்து வந்திருந்த பக்தா்கள் அனைவருக்கும் ஆசி வழங்கியதுடன், மஞ்சள் கொத்து மற்றும் கரும்புகள் ஆகியவற்றையும் வழங்கினாா். காணும் பொங்கல் நாளாகவும், விடுமுறை தினமாகவும் இருந்ததால் திரளான பக்தா்கள் வந்திருந்து நீண்ட நேரம் காத்திருந்து காஞ்சி சங்கராசாரியரிடம் ஆசி பெற்றனா்.