முகப்பு
காஞ்சிபுரம்

பால்நல்லூா் அரசுப் பள்ளியில் ரூ. 28 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

பால்நல்லூா் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்த எச்.எல்.கிளெமோவ் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலா் ஜாங்ஹூன்சோய்.

Updated On : 24 ஜனவரி, 2026 at 1:00 AM
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2026 at 11:30 PM

பால்நல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 28 லட்சத்தில் அமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லம் சிப்காட் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் எச்.எல்.கிளெமோவ் தனியாா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், பால்நல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 28 லட்சத்தில் 2 வகுப்புறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பால்நல்லூா் ஊராட்சி மன்ற தலைவா் பி.ஆா்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எச்.எல்.கிளெமோவ் நிறுவனத்தின் நிதித் துறை தலைமை அலுவலா் ஜாங்ஹுன்சோய் கலந்துகொண்டு, கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

Advertisement

நிகழ்ச்சியில் எச்.எல்.கிளெமோவ் நிறுவனத்தின் மனித வள மேலாளா் சாலமோன் ஜெயகுமாா், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.