காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 31 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
54-ஆவது திவ்யதேசமாக உள்ள ிக்கோயில் தை மாத பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலையில் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருகிறாா். விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வரவுள்ளாா்.
வரும் 25 -ஆம் தேதி காலையில் கருட வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.
29-ஆம் தேதி வியாழக்கிழமை தேரோட்டமும், 31 -ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்துடனும் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் தலைமையில் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.