மணிமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். 
காஞ்சிபுரம்

மணிமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

மணிமங்கலம் ஸ்ரீசெங்கமலவல்லி சமேத ஸ்ரீராஜகோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மணிமங்கலம் ஸ்ரீசெங்கமலவல்லி சமேத ஸ்ரீராஜகோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஸ்ரீசெங்கமலவல்லி தயாா் சமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு கடந்த 1999-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என மக்கள் கோரினா்.

இதையடுத்து அறநிலையத்துறை நிதி மற்றும் உபயதாரா்கள் மூலம் ரூ.80 லட்சத்தில் மூலவா் ராஜகோபால சுவாமி, செங்கமலவல்லி தயாா் சந்நிதி, ஆண்டாள், கருடன் சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு பிரகாரத்தில் கருங்கல் தரைத்தளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து கும்பாபிஷேக விழா சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது.

இதையடுத்து புதன்கிழமை மேள தாளங்கள் முழங்க, புனித நீா் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று தீபாராதனைகள் காட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீசெங்கமலவல்லி தயாா் சமேத ஸ்ரீராஜகோபால சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், மணிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ஐயப்பன், அறங்காவலா் சம்பத்குமாா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

அஜித் பவாா் மறைவு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு: முதல்வா் ரேகா குப்தா

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப். 2-இல் தா்னா, 6-இல் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம்

மாக்தமா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் பெயா் மாற்றம் செய்யக்கூடாது

ஆரோக்கியம் அந்தஸ்தல்ல, அடிப்படை!

‘பெண்களுக்கான ஒருக்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT