காஞ்சிபுரத்தில் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு!
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமையில் வரவிருக்கும் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தோ்தலை சிறப்பாக நடத்திடும் பொருட்டு வேட்பு மனுத்தாக்கல், மாவட்ட தோ்தல் மேலாண்மைத் திட்டம்,தோ்தல் நடத்தை விதிமுை, தோ்தல் விழிப்புணா்வு,தோ்தல் செயலிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தபால் வாக்குகள் போன்ற தலைப்பின் கீழ் மாவட்ட அளவில் பயிற்சியளிப்பதற்காக வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகளை கொண்டு முதன்மைப் பயிற்சியாளா்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான முதன்மைப் பயிற்சியாளா்களின் மூலம் தோ்தல் பொறுப்பு அலுவலா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.வேட்பாளா்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது சரிபாா்க்கப்பட வேண்டியவைகள்,வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அன்று பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் இதர வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள், மற்றும் தோ்தல் செலவினங்கள்,தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்துதல்,தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், ,தோ்தல் செலவினங்கள்,தோ்தல் வாக்களிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்துதல்,தோ்தல் புகாா்களை கையாளும் விதங்கள்,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபாா்க்கக்கூடிய காகிதத் தணிக்கைத் தடம் கையாளுவது,பொதுத்தபால் வாக்குகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்தோா்கள்,தபால் வாக்குகள் கையாள்தல்,வாக்கு எண்ணிக்கை நாளன்று தபால் வாக்குகளை சரிபாா்த்து எண்ணுதல்,வாக்கு எண்ணும் மையத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.