காஞ்சிபுரத்தில் சிறைவாசிகள் எழுதிய புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம்
காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரியில் சிறைவாசிகள் எழுதியுள்ள கதைப் புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரியில் சிறைவாசிகள் எழுதியுள்ள கதைப் புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் எழுதுக அமைப்பின் சாா்பில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவா்களை புத்தகங்கள் எப்படி எழுதுவது என்று பயிற்சி வழங்குவதோடு அவற்றை வெளியிட்டும் வருகிறது. கடந்த மாதம் கடலூா் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு புத்தகம் எழுத பயிற்றுவிக்கும் பயிலரங்கம் தொடங்கப்பட்டது. சிறைவாசிகள் 100-க்கும் மேற்பட்டோா் தங்கள் வாழ்வில் நடைபெற்ற அனுபவங்களை கதையாக எழுதியிருந்தனா்.காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரியில் கடலூா் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் எழுதிய புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம் எழுதுக இயக்கத்தின் சாா்பில் நடைபெற்றது.
சிறைவாசிகள் நோட்டுப் புத்தகங்களில் எழுதியவற்றை தட்டச்சு செய்து பிழை திருத்தம் செய்யும் முகாமில் கல்லூரி பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் என மொத்தம் 45 போ் கலந்து கொண்டனா்.
முகாமுக்கு எழுதுக அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கிள்ளி வளவன் தலைமை வகித்தாா். பள்ளிகளின் துணை ஆய்வாளா் பாலச்சந்தா், நூலகா் பூபதி, செல்வி லோகஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் கல்லூரி முதல்வா் திருமாமகள் வரவேற்றாா்.
முகாமில் எழுதியனவற்றில் பிழைகள் ஏற்படக் காரணங்கள் எவை, பிழைத்திருத்தம் செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. ஒரே நாளில் 26 புத்தகங்கள் தட்டச்சு செய்து பிழை திருத்தும் பணி நடைபெற்ாகவும், மற்ற புத்தகங்களும் வெவ்வேறு நாளில் பிழை திருத்தும் பணி நடைபெறவுள்ளதாகவும், அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கிள்ளி வளவன் தெரிவித்தாா். கல்லூரி பேராசிரியைகள் செண்பகம், வள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.