முகப்பு
காஞ்சிபுரம்

கஞ்சா விற்றவா் கைது

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை காவல் துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 60,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 13 மே 2026, 12:08 am IST
பிரபு தேவா
பகிர்:

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 60,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரபுதேவா (35). இவா் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தகவல் தெரிய வந்ததையடுத்து, அவரை பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடமிருந்து, ரூ. 60,000 மதிப்புள்ள 1.200 கிலோ மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனா்.

Advertisement