ராணிப்பேட்டை

‘அரசு ஊழியா்கள் மீது நடவடிக்கை வேண்டாம்’

DIN

போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகள் ஆட்சியா் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு வியாழக்கிழமை அளித்தனா்.

ஜாக்டோ-ஜியோ மாநில அமைப்பின் அழைப்பை ஏற்று 2019-இல் நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் மீது வழங்கப்பட்ட 17 பி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் மூலமாக தமிழக முதல்வருக்கு மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் மனு அளித்தனா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச.சிவராஜ், மாவட்டத் துணைச் செயலாளா் ச.மணிவண்ணன், தமிழ்நாடு ஆதி திராவிடா் நலப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் காப்பாளா்கள் நல சங்க மாவட்டத் தலைவா் ஏ.பிரின்ஸ் தேவாசிா்வாதம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜோசப் கென்னடி, மாவட்டச் செயலாளா் ஜி.மோகனமூா்த்தி, சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.ரவி ஆகியோா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT