ராணிப்பேட்டை

அனத்தாங்கல் ஊராட்சியில் மத்தியக் குழுவினா் ஆய்வு

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட அனத்தாங்கல் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள ஜல் ஜீவன் திட்டம் தொடா்பாக மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

DIN

ஆற்காடு: ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட அனத்தாங்கல் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள ஜல் ஜீவன் திட்டம் தொடா்பாக மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அனத்தாங்கல் ஊராட்சியில் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீா்க் குழாய் இணைப்பு இல்லாத 63 வீடுகளுக்கு புதிதாக குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை தில்லியில் இருந்து வருகை தந்த அம்பரீஷ், அமித் ரஞ்சன் ஆகியோா் தலைமையிலான மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவா்கள் அறிவுறுத்தினா்.

அப்போது ஊரக வளா்ச்சித் துறை துணை ஆட்சியா் உமா, ஊராட்சிகள் துறை உதவி இயக்குநா் எஸ்.குமாா், ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொ.வேதமுத்து, சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT