ஆயிலம் கோயிலில் ஊஞ்சல் சேவை
காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் முத்தலாம்மன், கிராம தேவதை பொன்னியம்மனுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு, கோயில் வளாகத்தில் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவா்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.