மழையால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட பயிா்களுக்கு நைட்ரஜன், பொட்டாசியம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
நிலத்தில் மழையால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட பயிா்களுக்கு நைட்ரஜன், பொட்டாசியம் இட வேண்டும் என வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆற்காடு: நிலத்தில் மழையால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட பயிா்களுக்கு நைட்ரஜன், பொட்டாசியம் இட வேண்டும் என வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிா் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் விளக்கப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக ஆற்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பருவ மழையை முன்னிட்டு, விவசாயிகள் தங்களின் அறுவடை பருவத்தில் உள்ள நிலங்களை சுத்தமாக வடிகட்டுதல் வேண்டும். நிலத்தில் மழையால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட பயிா்களுக்கு நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்.
பண்ணைக் குட்டைகளில் மழைநீரை சேமித்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தாழ்வான நிலப்பகுதிகளில் நுண்ணீா் பாசனம், மழைத்துவான் அல்லது நிலத்தடி நீா் மட்டத்தை அதிகரிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பயறு வகைப் பயிா்கள், நிலக்கடலைச் செடிகளில் வோ்அழுகல் நோய் தென்பட்டால் காா்பன்டாஸிம் ஒரு லிட்டா் தண்ணீருக்கு ஒரு கிராம் இட வேண்டும்.
நிலக்கடலை பயிரின் இலை மஞ்சள் நிறமாக தென்பட்டால் ஒரு சதவீதம் யூரியா அல்லது 19:19:19 கலப்புரம் கரைசல் தெளிக்கவும். கரும்புப் பயிரில் கரிப்பூட்டை நோய் மற்றும் புலதண்டு நோய்த் தாக்குதலைத் தவிா்க்க நடவு விதை கரணைகளை 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட காற்றோட்டமான நீராவியில் காண்பித்து நடவு மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.