முகப்பு
ராணிப்பேட்டை

மேல்விஷாரத்தில் தமுமுக ஆா்ப்பாட்டம்

வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
மேல்விஷாரத்தில்  ஆா்ப்பாட்டம்  நடத்திய  தமுமுகவினா்.
பகிர்:

வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மேல்விஷாரம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் எஸ்.எம்.கௌஸ் பாஷா தலைமை வகித்தாா். செயலாளா் அயாத்பாஷா, பொருளாளா் பாபாஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பேச்சாளா் சானாவுல்லா, மாநிலச் செயலாளா் ஏஜாஸ் அஹமது ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

மாவட்டத் தலைவா் ஏ.ஓ.ஏ. இம்ரான், மேல்விஷாரம் நகரக் கூட்டுக் குழு நிறுவனா் மன்சூா்பாஷா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடா்பாளா் பா.சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →