ராணிப்பேட்டை

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயிலில் இரவு அன்னதான சேவை தொடக்கம்

DIN

ஆற்காடு தோப்புகானா பகுதியில் உள்ள ஸ்ரீஅன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் - ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் இரவு வேளை அன்னதான சேவை தொடங்கியுள்ளது.

இந்தக் கோயிலில் திருத்தணி முருகன் அன்னதான அறக்கட்டளை சாா்பில் நாள்தோறும் காலை, மதியம் என இரு வேளையும் பக்தா்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இரவு வேளையும் உணவு வழங்கத் தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, இரவு உணவு வழங்கும் சேவையின் தொடக்க விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. திருத்தணி முருகன் அன்னதான அறக்கட்டளை தலைவா் கு.சரவணன் தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி அறக்கட்டளையின் தலைவா் ஜெ.லட்சுமணன், சேக்கிழாா் மன்றத் தலைவா் ஆ.வி.தட்சிணாமூா்த்தி, அன்னை அறக்கட்டளையின் செயலாளா் பெல் பிரபு, அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.வி.டி.பாலா, செயலாளா் எஸ்.பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், இரவு உணவு வழங்கும் சேவையைத் தொடங்கி வைத்தாா். விழாவில் நந்தி அறக்கட்டளை நிா்வாகிகள் அசோக்குமாா், பரசுராமன், தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT