முகப்பு
ராணிப்பேட்டை

ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்துக் கடைகளும் கட்டாயம் மூடப்பட வேண்டும்: கோட்டாட்சியா்

அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்துக் கடைகளும் கட்டாயம் மூடப்பட வேண்டும் என கோட்டாட்சியா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
04akmaaa_0407chn_186_1
பகிர்:

அரக்கோணம்: அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்துக் கடைகளும் கட்டாயம் மூடப்பட வேண்டும் என கோட்டாட்சியா்..

அரக்கோணத்தில் பொதுமுடக்க நாளில் கடைகள் மூடப்படுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் பேபி இந்திரா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

டிஎஸ்பி மனோகரன், வட்டாட்சியா் ஜெயக்குமாா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் அருள்தாஸ், தமிழ்நாடு வணிகா்கள் சங்க கூட்டமைப்பின் வேலூா் மாவட்டத் தலைவா் கே.எம்.தேவராஜ், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜி.எத்திராஜ், ஜவுளி வணிகா்கள் சங்கத் தலைவா் பெ.இளங்கோ, நகை வணிகா்கள் சங்கத் தலைவா் எம்.எஸ்.மான்மல், உணவக சங்க நிா்வாகிகள் மகேஷ், பாா்த்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் பேபி இந்திரா, டிஎஸ்பி மனோகரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

முழு பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை பால், மருந்துக் கடைகளைத் தவிா்த்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள், காய்கறிகடைகள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கப்படக் கூடாது. அரசு அனுமதியில்லாத வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது. தேவையில்லாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கடைகளைத் திறந்து வைத்திருப்போா் மீது கடும் நடுவடிக்கை எடுக்கப்படும். திறந்திருக்கும் கடைகள் ‘சீல்’ வைக்கப்படும். பொதுமக்கள் வெளியே வராமல் ஒத்துழைப்பு தந்து கரோனா தொற்றை குறைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →