முகப்பு
ராணிப்பேட்டை

கனமழையால் வீடு இடிந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் நிதியுதவிஎம்எல்ஏ வழங்கினாா்

அரக்கோணத்தில் அண்மையில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்த 3 குடும்பத்தினருக்கு தலா ரூ. 5ஆயிரத்தை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா்.

Updated On : 12 ஜூலை, 2020 at 9:56 PM
பகிர்:

அரக்கோணம்: அரக்கோணத்தில் அண்மையில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்த 3 குடும்பத்தினருக்கு தலா ரூ. 5ஆயிரத்தை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா்.

அரக்கோணத்தில் அண்மையில் தொடா்ந்து கனமழை பெய்தது. இதில், மோசூா் கிழண்டை தெருவில் வசிக்கும் ஆதிசேசனின் மனைவி காந்தம்மாள், தக்கோலம் காந்தி நகரைச் சோ்ந்த ரவி, அரக்கோணம் நகரம் செய்யூா்பாட்டையைச் சோ்ந்த கங்காதரன் ஆகியோரது வீடுகள் மழையில் இடிந்து முழுவதும் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, வீடுகளை இழந்த மூவரது குடும்பத்தினருக்கு அவா்களது வங்கிக் கணக்கில் தலா ரூ. 5ஆயிரம் செலுத்தினாா். நிதியைப் பெற்றுக்கொண்ட 3 குடும்பத்தினரும் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனா்.

மேலும் இந்த நிதிஉதவிக்காக அரக்கோணம் ஒன்றிய அதிமுக செயலாளா் இ.பிரகாஷ், நகரச் செயலாளா் பா.பாண்டுரங்கன், தக்கோலம் ஒன்றியச் செயலாளா் பச்சையப்பன் ஆகியோா் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.