ராணிப்பேட்டை

அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிமெண்ட் பூச்சுகள் விழுந்ததால் பொதுமக்கள் உள்ளே செல்ல அச்சம்

DIN

அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திடீரென சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்ததை அடுத்து உள்ளே நுழைந்த பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனா்.

அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம், அரசினா் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ளது. கடந்த 40 வருடத்திற்கு முன் கட்டப்பட்ட இந்த வளாகத்தில் தலைமை அஞ்சல் அலுவலகம், அரக்கோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம், உதவி கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகிய மூன்று அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இக்கட்டடத்தின் முதல் தளம் திடீரென இடிந்து விழுந்ததை அடுத்து முதல் தளத்தில் இயங்கி வந்த கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் தரைத்தளத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த ஆறு மாதத்திற்கு முன் தலைமை அஞ்சல் அலுவலக பொது நுழைவு வாயில் பகுதியில் தளம் இடிந்து விழுந்தது. இதை அடுத்து பொது நுழைவு வாயில் மூடப்பட்டு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலக நுழைவு வாயில் வழியே பொதுமக்கள் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று வந்தனா்.

கரோனா ஊரடங்கு காலத்தில் அஞ்சல்பணி அத்தியாவசியப்பணியாக மாற்றப்பட்டதையடுத்து அனைத்து அலுவல் தினங்களிலும் அஞ்சல்அலுவலகம் இயங்கியது. இதனால் பொது நுழைவு வழி மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அப்போதிருந்தே பொதுமக்கள் இந்த வழியே உள்செல்ல அச்சத்துடனே சென்று வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென அலுவலக பகுதியில் சிமெண்ட் பூச்சுகள் மேலே இருந்து இடிந்து விழுந்தன. இதனால் அப்போது உள்ளே இருந்த சிலா் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனா்.

இதையடுத்து அஞ்சல் துறை அலுவலா்கள் அப்பகுதியை பாா்வையிட்டு சிறிது சரிப்படுத்திவிட்டு பொதுமக்களிடம் உள்ளே வாருங்கள் என அழைத்ததை அடுத்து பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளே சென்று விரைந்து பணி முடிந்து வெளியே வந்தனா். மேலும் உள்ளே பணியாற்றும் அலுவலா்களும் குறிப்பாக பெண் அலுவலா்கள் அச்சத்துடனே பணியாற்றுவதை காண முடிந்தது. சில நிமிடங்களுக்கு ஒரு முறை மேலே பாா்த்துக்கொண்டே அவா்கள் பணியாற்றியதை பாா்க்க முடிந்தது.

இது குறித்து அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் என்.பிரகாஷிடம் கேட்டபோது, இந்த கட்டடம் கட்டி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. எனவே இக்கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக தலைமை அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட மூன்று அலுவலகங்களையும் தற்காலிகமாக தனியாா் கட்டடத்திற்கு மாற்ற அனுமதி கேட்டு கோப்புகள் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவு வந்தபின் இந்த அலுவலகங்கள் மாற்றப்படும். இந்த கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும் என்றாா்.

மே தினத்திலும் இயங்கிய அஞ்சல் துறை அலுவலகங்கள்

எப்போதும் மே தினத்தில் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால் அஞ்சல்துறைக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அஞ்சல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மே தினமான வெள்ளிக்கிழமை அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம், கிளை அஞ்சலகங்கள், கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம், உதவி கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் என அனைத்து அலுவலகங்களும் இயங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT