ராணிப்பேட்டை

ஆட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு கபசுர குடிநீா்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

DIN

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு நோய் எதிா்ப்பு சத்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீரை ஆட்சியா் ச.திவ்யா்தஷினி சனிக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீா், நிலவேம்பு குடிநீா், சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இதையடுத்து அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையிலான ஆயுா்வேத மற்றும் சித்த மருத்துவ முறை, இயற்கை உணவுப் பொருள் கண்காட்சியை ஆட்சியா் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டு, அதன் பயன்கள் குறித்து மருவா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள் தங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நோக்கில் எளிமையான யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார நல அலுவலா் வேல்முருகன், சித்த மருத்துவ அலுவலா் சுசி கண்ணம்மா மற்றும் வாலாஜா, அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள்,செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT