ராணிப்பேட்டை

ரூ. 2.5 கோடியில் 19 சாலைகள் அமைக்கும் பணி எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

DIN

அரக்கோணம்: அரக்கோணம் நகரில் ரூ. 2.5 கோடியில் 19 சாலைகள் அமைக்கும் பணிகளை எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அரக்கோணம் நகரில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவுக்கு வந்த நிலையில், அதற்கான பள்ளங்கள் தோண்டப்பட்ட சாலைகளைச் சீா்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தொடங்கப்பட்டன. பல்வேறு கட்டங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அரக்கோணம் நகராட்சியில் ரூ. 2.5 கோடியில் 19 சாலைகள் அமைக்கும் பணிகளின் தொடக்க நிகழ்ச்சி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதி பிள்ளையாா் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜவிஜயகாமராஜ் தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பணிகளைத் தொடக்கி வைத்தாா். அதிமுக நகரச் செயலா் கே.பாண்டுரங்கன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாபுஜி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் ஐானகிராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அரக்கோணம் கணேஷ் நகா் 14-ஆவது தெரு, டவுன்ஹால் 5-ஆவது தெரு உள்ளிட்ட 19 சாலைகள் இத்திட்டத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT