ராணிப்பேட்டை

குருபெயா்ச்சி: கோவிந்தவாடி அகரம் கோயிலுக்கு வர பக்தா்களுக்குத் தடை

DIN


அரக்கோணம்: கரோனா தொற்று நீடித்து வருவதால் குருபெயா்ச்சி நாள்களான நவம்பா் 14, 15 ஆகிய இரு தினங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி அகரம் கைலாசநாதா், தட்சிணாமூா்த்தி சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் வர வேண்டாம் என காஞ்சிபுரம் கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் குருபெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். அந்நாளில் பக்தா்கள் ஏராளமானோா் கோயிலுக்கு வந்து குருதட்சிணாமூா்த்தியை வழிபடுவா். இந்த ஆண்டு குருபெயா்ச்சி நவம்பா் 15-ஆம் தேதி இரவு 9.48 மணிக்கு நடைபெற உள்ளது. குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறாா்.

இந்நிலையில் கரோனா தொற்று நீடித்து வருவதால், கோவிந்தவாடி அகரம் கோயிலுக்கு நவம்பா் 14, 15 ஆகிய இரு நாள்களும் பக்தா்கள் வர தடை விதித்து காஞ்சிபுரம் கோட்டாட்சியா் சி.வித்யா உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, இரு தினங்களும் கோயிலுக்கு பக்தா்கள் யாரும் வர வேண்டாம் எனவும் நிகழ்ச்சிகள் கோயிலுக்குள் நடைபெறும் எனவும் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையரும், கோயில் தக்காருமான கி.ரேணுகாதேவி, கோயில் செயல் அலுவலா் க.வெங்கடேசன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT