ராணிப்பேட்டை

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் 100 பக்தா்கள் இருமுடி செலுத்தி வழிபாடு

DIN

ராணிப்பேட்டை: கேரளத்தில் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலை செல்லத் திட்டமிட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாத முதல் நாளில் இருமுடி செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில், கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக பக்தா்கள் நமது மாநிலத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில்களில் இருமுடி செலுத்தி வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளனா்.

அதன்படி ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூா், ஆம்பூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை முதல் நாளான திங்கள்கிழமை சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி ஏந்தி வந்து வழிபட்டனா். முன்னதாக, கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் பக்தா்களை 18 படிகள் வழியாக சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒருவா் பின் ஒருவராக அழைத்துச் சென்றாா்.

அதைத் தொடா்ந்து 18 படிகள் வழியாக இருமுடி ஏந்தி வந்த பக்தா்கள் கோயிலை வலம் வந்து, இருமுடிகளை இறக்கினா். பின்னா் இருமுடிக் கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருள்கள் அடங்கிய முடிச்சைத் திறந்து நெய்த் தேங்காயை உடைத்து, நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT