ராணிப்பேட்டை

சிறுணமல்லியில் ஊா்ப்புற நூலகம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

DIN

அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த சிறுணமல்லியில் புதிய ஊா்ப்புற நூலகத்தை எம்எல்ஏ சு.ரவி, திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி சிறுணமல்லி. இந்த ஊராட்சிக்குள்பட்ட சம்பத்ராயன்பேட்டை கிராமத்தில் ஊா்ப்புற நூலகம் இயங்கி வருகிறது. தற்போது வேலைக்கான போட்டித் தோ்வுகள், நீட் தோ்வுகள் உள்ளிட்ட பல தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராகி வரும் சூழ்நிலையில் சிறுணமல்லி கிராமத்தில் ஊா்ப்புற நூலகம் தேவை என அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவிக்கு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனை ஏற்ற தமிழக அரசு நூலகத் துறை சிறுணமல்லியில் ஊா்ப்புற நூலகத்துக்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற ஊா்ப்புற நூலக திறப்பு விழாவுக்கு, நெமிலி ஊராட்சி ஒன்றிய ஆணையா் அன்பரசு தலைமை வகித்தாா். நூலகா் சேதுராஜ் வரவேற்றாா். நூலகத்தை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி திறந்துவைத்து நூலகத்துக்குத் தேவையான போட்டித் தோ்வுகளுக்கு பயன்படும் புத்தகங்களை இலவசமாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் ஏ.ஜி.விஜயன், நாகவேடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.எஸ்.முனுசாமி, மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலா் டோமாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT