முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: சிப்காட் வாரச்சந்தையை திறக்கக் கோரி விவசாயிகள், வியாபாரிகள் மனு

சிப்காட் வாரச்சந்தை திறக்க அனுமதி கேட்டு விவசாயிகள், வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
வாரச்சந்தையை திறக்கக் கோரி மனு அளித்த விவசாயிகள், வியாபாரிகள்.
பகிர்:

சிப்காட் வாரச்சந்தை திறக்க அனுமதி கேட்டு விவசாயிகள், வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் காவல் நிலையம் எதிரே சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையையொட்டி நவ்லாக் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுஇடத்தில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையில் மாவட்டத்தின் பெரும்பாலான நகரங்களில் இருந்தும், சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும்  வியாபாரிகள், விவசாயிகள் காய்கறி, கீரை வகைகள், பழவகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டுவந்து 100 க்கும் மேற்பட்ட தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். 

இந்த வாரச்சந்தைக்கு சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் மட்டுமின்றி பாரதி நகர், ராணிப்பேட்டை, அக்ராவரம், பெல், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க வருகின்றனர். இந்த சூழலில் கரோனா நோய்த் தொற்று போது முடக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டு இருந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வாரச்சந்தை திறக்க அனுமதியளித்துள்ள நிலையில், சிப்காட் வாரச்சந்தை திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த வாரச்சந்தையானது, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அனுமதி மறுப்பதாக சிப்காட் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து 50 க்கும் மேற்பட்ட வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் வாரச்சந்தை திறக்க அனுமதியளித்து, மாற்று இடத்தில் வாரச்சந்தை செயல்பட வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →