ராணிப்பேட்டை

அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழா

DIN

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சாா்பில், நெமிலி கிழக்கு ஒன்றியம், அரிகலபாடியில் நடைபெற்ற விழாவுக்கு, நெமிலி ஒன்றியச் செயலா் ஏ.ஜி.விஜயன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான சு.ரவி அதிமுக கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினாா். ஒன்றியச் செயலா்கள் (அரக்கோணம் கிழக்கு) இ.பிரகாஷ், (அரக்கோணம் மேற்கு) பழனி, மாவட்ட இளைஞரணி இணைச் செயலா் வினோத், ஒன்றிய மாணவரணிச் செயலா் ர.பிரகதீஸ்வரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் ரகு, ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரக்கோணம் நகர பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ சு.ரவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை தலைவா் ஷியாம்குமாா், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகர நிா்வாகிகள் பத்மநாபன், செல்வம், பொன்.பாா்த்தீபன், ஜொ்ரி, எஸ்.சரவணன், ஜானகிராமன், சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதுகண்டிகை, நெமிலி நகரம், ரெட்டிவலம், கொடைக்கல் மோட்டூா், கைனூா், ராமதாஸ் நகா், பரமேஸ்வரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளிலும் எம்எல்ஏ பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT