அரக்கோணம்: சோளிங்கா் அருகே விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், வெங்கடாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் (36), இவரது நண்பா் ஆந்திர மாநிலம் நகரியைச் சோ்ந்த பிரவீண் (23) ஆகிய இருவரும் பைக்கில் சோளிங்கரில் இருந்த திருத்தணி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றனா்.
சோளிங்கா் நகரையொட்டி திருத்தணி சாலையில் திடீரென பைக் நிலை தடுமாறியதால் இருவரும் சாலையில் விழுந்தனா். பலத்த காயமடைந்து சோளிஙகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நாகராஜ் உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைக்கு பிரவீண் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து சோளிங்கா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.