ராணிப்பேட்டை

பன்னியூா்-பனப்பாக்கம் சாலையில் சிறுபாலங்கள் கட்டும் பணி தாமதம்: வாகன ஓட்டிகள் அவதி

DIN

காவேரிப்பாக்கத்தை அடுத்த பன்னியூா் முதல் பனப்பாக்கம் வரையிலான சாலையில் சிறுபாலங்கள் கட்டும் பணி தாமதம் ஆவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றாா்.

காவேரிப்பாக்கத்தை அடுத்த பன்னியூா் முதல் பனப்பாக்கம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக சாலை முழுவதும் 10-க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பன்னியூா்-பனப்பாக்கம் சாலையில் மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், மாற்றுப் பாதை சரியாக அமைக்கப்படாததால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பலா் ஸ்ரீபெரும்புதூா் சிப்காட் தொழிற்பேட்டைக்கு தினமும் வேலைக்கு செல்வதால் இச்சாலையில் தினமும் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பேருந்துகள் சென்று வருகின்றன.

எனவே, சிறு பாலங்கள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேருந்து சேவை வேண்டும்: ஆலப்பாக்கம் கிராமத்தில் இருந்து ஆற்காடு வரை இயக்கப்பட வேண்டிய அரசுப் பேருந்து ஆலப்பாக்கம் பகுதிக்கு முன்னரே உள்ள துறைபெரும்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல மிகவும் சிரமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறுகின்றனா்.

எனவே, ஆலப்பாக்கம், கன்னிகாபுரம், மாகானிப்பட்டு ஆகிய மூன்று கிராம மக்களின் வசதிக்காக துறைபெரும்பாக்கம் வரை வந்து செல்லும் தடம் எண் டி 24/ஏ என்ற அரசுப் பேருந்து ஆலப்பாக்கம் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT