ராணிப்பேட்டை

வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை தொகுதி வாக்காளா்களுக்கு ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கிய, தொகுதி வேட்பாளா்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் அ.யுவராஜ் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இது தொடா்பாக அவா் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது...

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். கடந்த 4.4.2021 அன்று அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வாக்காளா்களுக்கு வாக்களிக்க பணம் பட்டு வாடா செய்தபோது, சுமாா் ரூ. 91 லட்சம் பணம் கைப்பற்றி காவல் துறை மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொகுதி முழுக்க தகவல் பரவியுள்ளது. அதேபோல் திமுக சாா்பிலும் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30. 3. 2021-ஆம் தேதி வேட்பாளா்கள் பணப்பட்டுவாடா மற்றும் ஏதேனும் அரசியல் கட்சிகளில் விதிமீறல் இருந்தால் தகவல் தெரிவிக்கப்பட எண் 94 98 74 75 62 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தகவல்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வாக்காளா்களுக்கு புடவை வழங்கி வருவதை தெரிவித்தேன். இதுவரை அந்த புகாா் மீது நடவடிக்கை எடுக்க எடுக்கவில்லை. மீண்டும் புகாா் தெரிவிக்க கொடுக்கப்பட்ட எண் 1800425 5669 என்ற எண்ணுக்கும், 733 939 423 9, 787 1002451 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்தும் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இப்படி தோ்தல் விதிமுறைகளை மீறி தொடா்ந்து செய்து வரும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளா்கள் மீது நடவடிக்கை எடுத்து வேட்பாளா்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT