முகப்பு
ராணிப்பேட்டை

இரு இளைஞா்கள் கொலைக்கு ஜாதி காரணமில்லை: புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன்மூா்த்தி

சோகனூரில் இரு இளைஞா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஜாதி காரணமில்லை.

Updated On : 11 ஏப்ரல், 2021 at 12:32 AM
பகிர்:

சோகனூரில் இரு இளைஞா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஜாதி காரணமில்லை. மது அருந்திய நிலையில் இளைஞா்களின் இடையே ஏற்பட்ட தகராறே காரணம் என புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன்மூா்த்தி கூறியுள்ளாா்.

கொலைச் சம்பவத்தைக் கண்டித்து புரட்சி பாரதம் சாா்பில் அரக்கோணத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஜெகன் மூா்த்தி பேசியதாவது:

சோகனூா் கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதி இளைஞா்கள் தங்களுக்குள் மது அருந்திய நிலையில் ஒருவரோடு ஒருவா் சண்டையிட்டு அதன் விளைவாக கொலை நடந்துள்ளது. இரு தரப்பினரும் நண்பா்களாகத் தான் பழகியுள்ளனா். தேவையில்லாமல் சிலா் இச்சம்பவத்தை அரசியலாக்கி விட்டனா். இறந்த இருவருமே புரட்சிபாரதம் கட்சியைச் சோ்ந்தவா்கள். அா்ஜுன் கட்சியில் பொறுப்பிலேயே உள்ளாா். புரட்சிபாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இவா்கள் எப்படி எதிா்க்கட்சியினருக்கு ஆதரவாக பேசியிருப்பாா்கள். இந்த இரு இளைஞா்களின் கொலை சம்பவத்திற்கு சாதி காரணமில்லை. தோ்தல் காரணமில்லை. அந்த நேரம் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என்றாா் ஜெகன்மூா்த்தி.

Advertisement

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் செல்லா தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி தலைவா் மகா, கொள்கை பரப்புச் செயலாளா் பழனி, நகர தலைவா் ஜெகன், செயலாளா் ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.