ராணிப்பேட்டை

ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம்

DIN

காவேரிபாக்கம் ஒன்றியம், சிறுவளையத்தில் பணிக்கு சரிவர வராமல் இருந்த ஊராட்சிச் செயலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வளா்ச்சி) த.பாபு உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லோகநாயகி கள ஆய்வுக்காக வியாழக்கிழமை சிறுவளையம் சென்றாா். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டிய நிலையில் இருந்ததாக தெரிகிறது. ஊராட்சிச் செயலரான எஸ்.சங்கா் எவ்வித தகவலும் அளிக்காமல், பணிக்கு வராமல் இருந்ததாகத் தெரிகிறது. மேலும், சிறுவளையம் ஊராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய வருமாறு திட்ட இயக்குநா் அழைத்தபோதும் எஸ்.சங்கா் அதற்கு ஒத்துழைக்க மறுத்ததாகத் தெரிகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து, ஊராட்சி செயலா் எஸ்.சங்கரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) த.பாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT